கனவு நனவாகக் கடுமையாக உழைப்பவர்களே!
கன்னி ராசிகாரர்களே 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 7 ஆம் இடம் 9 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 7 ஆம் இடம் திருமண பந்தத்தை குறிக்கும். 9 ஆம் இடம் உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேறுவதைக் குறிக்கும்,
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
கன்னி ராசி தொழிலும் வியாபாரமும்:
தொழிலில் சவால்கள் தென்படுகின்றது. வேலையே கதி என்று இருந்தால் வெற்றி காணலாம். தங்களது ஆளுமை, புதிய பணிகளை தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். தகவல் தொடர்பில் கவனமாக இருக்கவும். மிகுந்த பிரயத்தனத்தினால் உற்பத்தி திறன் காணலாம்.
குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (கடகம், சிம்மம்)
கன்னி ராசி பொருளாதாரம்:
பொருளாதாரத்தில் திடீர் உயர்வு உண்டு. ஆனால் ஆடம்பர செலவுகளுக்கும் பஞ்சமில்லை. நண்பர்களுக்கு கொடுத்த பழைய கடனை திரும்ப பெற முடியும்.
கன்னி ராசி குடும்பம்:
ஒவ்வொரு குடும்ப நபர்களும் தங்களது உதவியையே எதிர்பார்ப்பர். வார்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்ப சூழலில் அதிகமான சந்தோஷ தருணங்கள் இல்லை.
கன்னி ராசி கல்வி:
தகவல் தொடர்பு, ஊடகம், சமூக சேவை போன்ற பாடங்களை படிப்பவர்கள் வெற்றி காண்பர். எல்லா விஷயங்களையும் சுலபமாக கிரகித்துக் கொள்ள முடியும். கல்வியில் வெற்றி பெற சரியான திட்டங்கள் தேவை.
குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (மேஷம், ரிஷபம், மிதுனம்)
கன்னி ராசி காதலும் திருமணமும்:
அவசர முடிவுகள் வேண்டாம். கூடுமானவரை வாழ்க்கைத் துணையின் தேவைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவும்.
கன்னி ராசி ஆரோக்கியம்:
வெகு நாளைய உடல் உபாதைகளுக்கு இந்த காலக்கட்டத்தில் நிவாரணம் உண்டு. அனைத்துப் பழ வகைகளையும் பருவத்திற்கு ஏற்றாற் போல உட்கொள்ளவும். மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
குரு பகவான் பற்றிய மேலதிக தகவல்களுக்கு
- வீண் செலவுகள்
- கூடுதல் வேலைப் பளு
- நீண்ட நாளைய கடன் தொகை வசூலாகுதல்
- கல்வியில் முன்னேற்றம்
- முன்னெச்சரிக்கை:
- அதிக பிரயத்தனம் தேவைப்படும்.
- பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை.
- ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு ஹோமம் செய்யவும்.
சனி, குருஇ விஷ்ணு வழிபாடு நன்மை பயக்கும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா? மேலும் படிக்க
சனி, குருஇ விஷ்ணு வழிபாடு நன்மை பயக்கும்.
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம் தெரியுமா? மேலும் படிக்க