மேஷ ராசி நேயர்களே
உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்பவர்களே!
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக
ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். 8 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 12 ஆம் இடம் விரய ஸ்தானம் ஆகும்.
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
மேஷ ராசி - தொழிலும் வியாபராமும்:
கூடுமானவரை இக் கால கட்டத்தில் கூடுதல் வேலைகளை தானாக முன் வந்து எற்றுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நடப்பு வேலைகளை முடிப்பதே சற்று சிரமமாகும். அநாவசியமாக சிலர் வீண் பழிகளை சுமத்தலாம். இது பொறுமையை சோதிக்கக் கூடிய ஒரு காலமாகும். வேலை மாற்றத்திற்கும் இடம் உண்டு. சோம்பேறித்தனத்தை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் மேலதிகாரிகள் தங்களை இக் காலக் கட்டத்தில் கூர்ந்து கவனிக்கக் கூடும். வியாபார நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தும். குறித்த காலத்தில் வேலையை முடித்து தருவது சிரமமாகும். இதனால் மன அழுத்தம் உண்டாகும்.
மேஷ ராசி - பொருளாதாரம்:
இக் காலக் கட்டத்தில் எதிர்பாராத பராமரிப்பு செலவுகள் உண்டு. அவசரப்பட்டு முதலீடுகளில் இறங்க வேண்டாம். முதலீட்டு நிபுணர்களின் ஆலோசனை பெற்று பண முதலீடு செய்யவும். சொத்துக்கள் வாங்குவதற்கு இடம் உண்டு. எதற்கும் ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து அதன் பின் முதலீடுகளை மேற்கொண்டால் மாத வரவு செலவு கணக்கில் பற்றாக்குறை இராது.
மேஷ ராசி - குடும்பம்:
கூடுமானவரை நட்புணர்வோடு உறவுகளை பராமரிக்கவும். வீட்டில் சற்று கடுமையான சூழல்களும் இந்த கட்டத்தில் இருக்கக்கூடும். உங்களுடைய சாணக்கியத்தனத்தால் மட்டுமே உறவுகளை பராமரிக்க முடியும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தனி கவனம் செலுத்தவும்.
குரு பகவான் பற்றிய மேலதிக தகவல்களுக்கு
மேஷ ராசி - கல்வி:
மாணவர்களிடையே தன்னம்பிக்கை மிகும். படிப்பில் நல்ல கவனமும் உண்டாகும். அயல் நாட்டு அழைப்புகளுக்கும் இடம் உண்டு. பொக்கிஷமான அறிவு விருத்திக்கு இடமுண்டு.
மேஷ ராசி - காதலும் திருமணமும்:
காதலர்களிடையே சிறு சிறு மனப்பிணக்கு ஏற்படலாம். கூடுமானவரை வெளிப்படையாக செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணைக்காக போதுமான நேரம் ஒதுக்கவும். இடையிடையே சிறு சிறு பயணங்கள் மேற் கொண்டு உறவுகளை வலுப்படுத்துவது நல்லது.
மேஷ ராசி - ஆரோக்கியம்:
உணவு நேரங்களில் வேளை தப்பாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அஜீரணக் கோளாறுகள் தென்படுகின்றது. இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்வது நல்லது உடற்பயிற்சியை தவறாது மேற்கொள்ளவும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் மருத்துவ ஆலோசனைகள் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும்.
மொத்தத்தில் இந்த மாற்றமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- செலவுகள்
- பணிகளில் தாமதம்
- அஜீரணக் கோளாறுகள்
- பொருளாதார இடர்பாடு
- முன்னெச்சரிக்கை:
- கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
- எல்லாரிடமும் விட்டுக் கொடுத்து செல்லவும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் 'கல்வி உபகரணங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு தனாமாக கொடுப்பது நல்லது. தினந்தோறும் "ஓம் பிருகஸ்பதியே நமஹ” என்று பாராயணம் செய்யவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.
கிருஷ்ணர் காட்சி தந்த தென் துவாரகை மேலதிக தகவல்களுக்கு
கிருஷ்ணர் காட்சி தந்த தென் துவாரகை மேலதிக தகவல்களுக்கு
ரிஷப ராசி நேயர்களே
பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பவர்களே!
ரிஷபம் ராசிக்கார அன்பர்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எப்படி என பார்க்கலாம். குருபகவான் இதுநாள் வரை ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ஆவது வீட்டில் அமர்ந்திருந்தார். அக்டோபர் முதல் 7ஆவது வீடான களத்திர ஸ்தானத்திற்கு நகர்கிறார். இது சிறப்பான அமைப்பாகும். சமசப்தம பார்வையாக ராசியை பார்ப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும் காலமாகும்.
இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசாபுக்திக்கு ஏற்பவே ஜாதகருக்கு நல்லது கெட்டது நடக்கும்.
ரிஷப ராசி - காதலும் திருமணமும்:
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, இதுநாள் வரை காதலோ, திருமணமோ கைகூடவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். இனி அந்த கவலை வேண்டாம், காதல் மலரும் நேரம் வந்து விட்டது. காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலமும் இதுதான். ஏனென்றால் குருபகவான் உங்கள் ராசிக்கு 7ஆவது இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை நேரிடையாக பார்வையிடுகிறார். செல்வம், செல்வாக்கு, பெயர் புகழ் கூடும்.
ரிஷப ராசி - பொருளாதாரம்:
பொருளாதார ரீதியாக பார்த்தால் பண வரவு அதிகமாகவே இருக்கும். அடைபட்டுக் கிடந்த வருமான வழிகள் எல்லாம் திறக்கும். உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானமான மீன ராசியை குருபகவான் 5வது பார்வையாக பார்க்கிறார். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணம் அதிகம் வருகிறதே என்று வீணாக செலவு செய்ய வேண்டாம். ஏனெனில் அட்டமத்து சனிபகவான் வீணான செலவுகளை இழுத்து விட்டு விடுவார்.
2018 முதல் செய்யும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். இது நாள் வரை இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3வது வீடான கடகத்தை பார்வையிடுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். கடன்கள் மறைந்து சேமிப்பு அதிகரிக்கும். ஏப்ரல் மாதம் குரு வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது கவனமாக இருக்கவும், பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம்.
சனி, ராகு கேது குருபகவானால் நன்மைகள் பல நடந்தாலும் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விசயத்தில் கவனம் தேவை. முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். 2019 பெப்ரவரி முதல் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு, 8ல் கேது அமர உள்ளதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் ஆஞ்சநேயரை வணங்கவும். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றவும். சனியால் ஏற்படும் கெடுதி ஓரளவிற்கு மறையும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
மிதுன ராசி நேயர்களே
மன்னிக்கும் மனப்பக்குவம் உள்ளவர்களே!
தங்களது ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 10 ஆம் இடம் 12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 10 ஆம் இடம் தொழிலையும் 12 ஆம் இடம் விரயம் மற்றும் அயல் நாட்டு பயணத்தையும் 2 ஆம் இடம் பண வரவு மற்றும் குடும்பத்தையும் குறிக்கும்.
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்,
மிதுன ராசி தொழிலும் வியாபராமும்
வேலைகள் குவியும். அதனால் வேலைகளை ஒப்புக் கொள்ளும் போதே நிதானமாக பார்த்து ஒப்புக் கொள்ளவும். உங்கள் வேலைக்கு அங்கீகாரம் உண்டு. ஆனால் அது மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே நிகழும். வேலை நிமித்தமாக அயல் நாட்டு பயணங்களும் தெரிகின்றது. வியாபார முன்னேற்றத்திற்கு மிகுந்த பிரயத்தனங்கள் தேவைப்படும். அதிக வேலைப் பளுவால் கவனம் செலுத்த முடியாது போகலாம் எனவே ஒப்புக் கொண்ட பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துக் கொடுப்பது நல்லது.
குருபகவானின் அதிசார சஞ்சாரம்:
13.03.2019 முதல் 18.05.2019 வரை குரு கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிசாரமாகச் செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
10.04.2019 முதல் 18.05.2019 வரை மூலம் நட்சத்திரத்திலும், 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் ரசனைக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மறுபடியும் பெறுவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் கலந்துகொள்வீர்கள். ஆனால், அடிக்கடி முன்கோபம் வந்து செல்லும். திடீர்ப் பயணங்கள், கடன் தொந்தரவுகளும் ஏற்பட்டு நீங்கும்.
மிதுன ராசி பொருளாதாரம்:
அனாவசிய செலவுகள் காணப்படுகின்றது. அதே நேரத்தில் கடன்களை திரும்ப செலுத்தஇந்த காலக் கட்டம் கை கொடுக்கும். நண்பர்கள் மூலம் பொருளாதார உதவி பெற வாய்ப்பு உண்டு. பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் காண்பது சற்று சிரமம்.
மிதுன ராசி குடும்பம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய நகையை மாற்றி, புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள்.
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. குடும்ப பொறுப்புகளை ஏற்க தாங்கள் தயங்கக் கூடும். இதனால் சில சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையினை தவிர்க்கவும்.
மிதுன ராசி கல்வி:
கல்வியில் வெற்றி காண அதிக பிரயத்தனம் தேவைப்படும். வீண் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் நடைமுறை சாத்தியங்களைப் பார்த்து படிப்பில் திட்டங்களை வகுப்பது நல்லது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படக் கூடியகாலமிது. வீண் பிடிவாதங்களை தவிர்த்தாலே நல்ல பலன்களைப் பெற முடியும்.
மிதுன ராசி காதலும் திருமணமும்:
காதல் உறவுகள் ரம்மியமாக இல்லை. சொன்னது ஒன்று புரிந்து கொண்டது ஒன்று என்ற விதமாக உறவுகள் அமையும். வீண் குழப்பங்கள் காணப்படுகின்றன. நல்ல புரிதலுக்கு மிகுந்த பொறுமை தேவை. திருமண வாய்ப்புகள் தாமதப்படலாம். திருமண உறவுகளை. தீர்மானிப்பதில் தாமதப் போக்கு தெரிகின்றது
மிதுன ராசி ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. உடலில் சிறு உபாதைகள் இருந்தால் கூட அதனை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- கூடுதல் வேலைப் பளு.
- நிதி உதவி பெறுதல்.
- வெற்றிக்கு அதிகப் பிரயத்தனங்கள்.
- திருமண ஏற்பாடுகள் தாமதமாகுதல்.
- உடல் உபாதைகள் .
- முன்னெச்சரிக்கை:
- நடைமுறை சாத்தியங்களை பார்த்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவும்.
- பெரிய அளவிலான கடன்களை தவிர்க்கவும்.
- குடும்ப உறவில் கூடுதலாக பொறுப்பு எடுத்துக் கொள்ளவும்.
- உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும்.
பரிகாரம்:
முடிந்தால் வியாழக்கிழமைகளில் ஒருபொழுது உணவை கடைபிடிக்கலாம். குரு பகவானுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறையேனும் ஹோமம் செய்யவும்.