சுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

காதல் நாயகன் சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து தனது ஆட்சி வீடான துலாம் ராசியில் செப்டம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமை முதல் சஞ்சாரம் செய்யப்போகிறார். ஜனவரி 1, 2019 ஆம் ஆண்டு வரை சுக்கிரன் துலாம் ராசியில் அமர்ந்திருப்பார். 



சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்தாலும் இம்முறை 4 மாதங்கள் துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். துலாம் ராசியில் ஏற்கனவே குரு அமர்ந்து உள்ளார். இனி சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். துலாமில் சுக்கிரன் குரு கூட்டணி அக்டோபர் வரை நடைபெற உள்ளது. இந்த கால கட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம் காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். ஏற்கனவே குருபகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பான அம்சமாகும். நன்மைகள் பல நடைபெற வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம்.

ரிஷபம் நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அம்மன் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.





மிதுனம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் பண வரவு உண்டு. அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். 
வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம்

கடகம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. உற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சர்க்கரை தானமாக தரலாம்.



சிம்மம் தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த சுக்கிரன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை. வேலை விசயமாக சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். 
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கன்னி உங்கள் ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்கிரன் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தன வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது. கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். பண வரவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 
அம்மன் ஆலயத்தில் வெண்மை நிற மலர்களைக் கொண்டு வழிபட நன்மைகள் நடக்கும்.

துலாம் உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். 
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறுவதால் சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.



தனுசு ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப் போகும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பண வருவாய் அதிகரிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். 
வீட்டில் துளசி செடிகளை வளர்க்க மேலும் பல நன்மைகள் நடைபெறும்.

மகரம் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள்.
வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.



கும்பம் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். மனைவி உடனான காதல் அதிகரிக்கும். 
மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். காதலி, நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும்.
மேலும் நன்மைகள் நடைபெற வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம்.

மீனம் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் அமரப் போவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். குருபகவானும் ஏற்கனவே எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் செலவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். செலவு வருதே என்று கவலை வேண்டாம்.
வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்க நன்மைகள் நடைபெறும்.


Name

Ayurvedic,1,Banner,8,cinema,70,Panchangam,9,spiritual,77,sports,19,Technology,12,Tourism,5,இன்றைய ராசிபலன்,64,கவிதைகள்,32,குருப்பெயர்ச்சி,5,திருக்கதைகள்,10,நிகழ்வுகள்,250,வேலைவாய்ப்புக்கள்,11,
ltr
item
Free Tech Daily: சுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
சுக்ரன் பெயர்ச்சி... அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
சுக்கிரன் பெயர்ச்சி: கன்னியில் இருந்து துலாமிற்கு இடம் மாறும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeWaYqgv_SUjllcjIjp34PmDEg6TRSMWc5xEq1SS_5eRy2xLHwQ-q7Ra1FNOL2lbFJ1VdT25K752QECK7O8EY90nbn71xw-K9H-9GXIC4mbsFOAJAB9ckvCv_nXyjejLnWv8vTsbSA7Gb6/s640/todayhoroscopes+copy.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeWaYqgv_SUjllcjIjp34PmDEg6TRSMWc5xEq1SS_5eRy2xLHwQ-q7Ra1FNOL2lbFJ1VdT25K752QECK7O8EY90nbn71xw-K9H-9GXIC4mbsFOAJAB9ckvCv_nXyjejLnWv8vTsbSA7Gb6/s72-c/todayhoroscopes+copy.jpg
Free Tech Daily
https://freetechdaily.blogspot.com/2018/09/12.html
https://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/2018/09/12.html
true
3500669192308647346
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy