Sources : SBS Tamil
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப்பயணிகளாக backpacker விசாவில் வந்து வேலைசெய்வதற்கான அனுமதி, குறிப்பிட்ட சில நாட்டவர்களுக்கே வழங்கப்பட்டுவந்த நிலையில் இதனை இந்தியா உள்ளிட்ட வேறு பல நாட்டவர்களுக்கும் விஸ்தரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் regional பகுதிகளிலுள்ள பண்ணைகள் உள்ளிட்டவற்றில் வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்துவரும் பின்னணியில், இப்பணிகளில் வெளிநாட்டவர்களை ஈடுபடுத்தும் நோக்கில் அரசு இதனை திட்டமிட்டுள்ளது.
இதன்படி சுற்றுலாப்பயணியாக ஆஸ்திரேலியா வந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படும் நாட்டவர்களின் பட்டியலில் இந்தியா, பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மொங்கோலியா ஆகிய 13 நாடுகளைச் சேர்த்துக்கொள்வதற்கு அரசு ஆலோசித்துவருகிறது.
அரசின் இத்திட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சம்மேளனம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் விஸ்தரிக்கப்பட்ட விவசாய விசா நடைமுறை கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மாத்திரம் சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பேர் working holiday விசாவில் ஆஸ்திரேலிய வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.