சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில், பல நாடுகளுக்கான வீசா நடைமுறையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
கடுவெல கம்பூச்சியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காகவும் பௌத்த சமய எழுச்சிக்காகவும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.