வாஸ்து சாஸ்திரத்தின் படி குதிரைலாடம் ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்று சொல்லப்படுகின்றது.
இது பிறைவடிவ நிலவு போல இருப்பதாகவும் இதில் மந்திர சக்தி இருப்பதாகவும் பண்டைய எகிப்து மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்
மேலும் சில கலாச்சாரங்களில் இது சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் பாதையென நம்பிக்கையும் இருந்தது.
இது மனிதர்களின் பணம் மற்றும் ஆன்மீக தேடல் இரண்டையும் பூர்த்தி செய்வதாக மக்கள் நம்பினர்.
புத்தாண்டில் அதிர்ஷ்டம் இருக்க அன்று தூங்கும்போது தலையணைக்கு அடியில் லாடத்தை வைத்து தூங்குவார்களாம். இந்த நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது.
தற்போது வாஸ்துப்படி இந்த குதிரை லாடத்தினை வீட்டில் மாட்டுவதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
- வாஸ்துவின் படி வீட்டின் முன்கதவில் இதனை மாட்டி வைப்பது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.
- குதிரைலாடத்தை ஒரு கருப்பு துணியில் சுற்றி அதனை நீங்கள் வீட்டில் எங்கு தானியங்களை சேர்த்து வைக்கிறீர்களோ அங்கு வைத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வீட்டில் தானிய பஞ்சமோ அல்லது உணவு பஞ்சமோ ஏற்படாது என்று நம்பப்படுகிறது. இதனை சனிக்கிழமைகளில் செய்யுங்கள்.
- குதிரைலாடத்தை ஒரு கருப்பு துணியில் சுற்றி அதனை நீங்கள் பணம் வைக்கும் லாக்கரில் வைத்துவிடுங்கள். இது உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இதனை சனிக்கிழமையில் செய்யுங்கள்.
- குதிரைலாடத்தில் இருந்து செய்யப்பட்ட மோதிரத்தை உங்கள் வலது கையின் நடுவிரலில் போட்டுக் கொள்ளுங்கள். இது உங்களை அனைத்து விதமான தீயசக்திகளிடம் இருந்தும், சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்தும் பாதுகாக்கும்.
- ஆற்றலூட்டப்பட்ட அதிர்ஷ்ட குதிரைலாடத்தை உங்கள் வீட்டின் முன்கதவில் U வடிவில் தொங்கவிட்டால் அது உங்கள் வீட்டை சூனியம், கண்திருஷ்டி மற்றும் செய்வினை போன்ற தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும்.
- கீழே இருந்து ஒரு குதிரைலாடத்தையோ அல்லது இரும்பு துண்டையோ எடுத்தால் அதில் எச்சில் துப்பி இடது தோள் புறமாக அதனை தூக்கி எரித்துவிட்டு நீங்கள் ஆசைப்படுவதை வேண்டினால் நீங்கள் வேண்டியது விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.
- குதிரை லாடம் மாட்டப்பட்ட கதவு வழியாக உங்கள் வீட்டுக்குள் விருந்தாளிகள் வந்தால் அவர்கள் அதேவழியிலேயே வெளியேற வேண்டும். இல்லையெனில் உங்கள் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சென்றுவிடுமாம்.
- இதனை வீட்டில் மாட்டும்போது எப்பொழுதும் மேல்நோக்கிய படியே மாட்டவேண்டும். அவ்வாறு மாட்டுவதுதான் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். மாறாக தலைகீழாக மாட்டும்போது அது துரதிஷ்டத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தும்.
- பயன்படுத்திய குதிரைலாடத்தைத்தான் கதவில் மாட்டவேண்டும். இது செல்வத்தை ஈர்க்க நூற்றாண்டுகளை கடந்தும் செய்யப்படும் வழிமுறையாகும்