நன்றி: http://www.virakesari.lk
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை மீண்டும் தற்காலிகமாக அமைத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு பொருத்தும்படி மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v7tghS5qm6mbTV7vzd_5EfdzsC_O05bgORNOq3H4JpaJ0U2T83vz7WyBA80KoeXJ8YALeEdpt-7fEB3zzqcjCwYqB0q2ZQMJKxzBi3yEyPYRzcGILWnShX5bVvcqYTxw=s0-d)
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை மீண்டும் தற்காலிகமாக அமைத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு பொருத்தும்படி மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றபோது இரு மதத்தினருக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளைத் தொடாந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதோடு, குறித்த வரவேற்பு வளைவு உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்,குறித்த வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகன்தினர் மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ தலைமையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ அகற்றப்பட்ட குறித்த வரவேற்பு வளைவிளை தற்காலிகமாக மீண்டும் அமைத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு வைக்குமாறு திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கினார்.