அஜித் நடிப்பில் உருவான விவேகம் படத்தில் நடிகை அக்ஷரா ஹாசனும் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனின் மகளான இவருக்கு ஷாருக்கான் என்றால் கொள்ளை பிரியமாம்.
ஷாருக்கானை எப்போது பார்த்தாலும் கண்கள் விரிய விரிய தான் பார்ப்பாராம். சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட அவர், ஷாருக்கான் எப்போதும் சூப்பர் ஸ்டார்.
அதுபோல் தற்போது அஜித் சாரும் சூப்பர் ஸ்டார் அளவுக்கு வந்துருக்காங்க. அதனால் சூப்பர் ஸ்டார் என்றால் ஷாருக்கான் சாரும் அஜித் சாரும் தான் என கூறினார்.