விஸ்வாசம் படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக ஃபிப்ரவரி 10 ல் வெளியாகி வசூல் சாதனையை அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
சிவா அஜித் கூட்டணியில் வந்த படங்களில் இது மிக முக்கியமானதாக உள்ளது. அதே நேரத்தில் அஜித்தின் படங்களில் அதிக வசூல் கொடுத்த படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
படம் வெளிவந்து 5 வாரங்கள் கடந்த பின்னும் இன்னும் 200 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 6 ம் வாரத்திலும் தேவ், ஒரு அடார் லவ் என படங்கள் வந்தும் விஸ்வாசம் படம் நீடித்து வருகிறது.