பொங்கலை முன்னிட்டு அஜித் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்தார். இருவருக்குமான சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் டி.தியாகராஜன் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அஜித் பற்றியும் விஸ்வாசம் ஷூட்டிங் அனுபவங்கள் பற்றியும் அவர் தெரிவித்ததாவது,
இந்த வருடம் பொங்கலை எங்களுக்கு மறக்க முடியாத பொங்கல். கடந்த வருடம் விவேகம் ரிலீஸ் பண்ணோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகல. அஜித் சாரே வந்து நாம ஒரு படம் பண்ணலாம் என்றார்.
அஜித் ஒரு கடின உழைப்பாளி. அவர் நேரம் காலம் எல்லாம் பார்ப்பதில்லை. அதே மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை வேறு யாரிடமும் பார்க்கமுடியாது. நமக்கே பெருமையாக இருக்கும். மற்ற நடிகர்கள் அவரிடம் இந்த குணத்தை கற்றுக் கொள்ள வேண்டும். என்றார்.
Thank you : behindwoods.com