![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnloOnfDS203IizO70M3HI_ySnLHvWmP3QOBffVVfVczEfE3RzXfZvM4VXz1osZEVImudCUBPwOL8aBJQq7u8mFT0D8yK7_Voxzo2C9bIGh6UWwSZutvasPEJu56i0sTPna-ksj1vX3Dgh/s640/theebam-800x420.jpg)
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும்.
திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தீபங்களை எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது என விரிவாக பார்க்கலாம்.
இந்த விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம்.
தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும் ஸ்லோகம்.
கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள்,
திண்ணைகளில் நான்கு விளக்குகள்,
மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள்,
நிலைப்படியில் இரண்டு விளக்குகள்,
நடைகளில் இரண்டு விளக்குகள்,
முற்றத்தில் நான்கு விளக்குகள்,
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றி வைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும் தீய சக்திகள் விலகி ஓடும்.
பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.
சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும். முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.
பின் பகுதியில் நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.
தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். சித்திர தீபம் தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள்.மாலா தீபம் அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுகிறது.
ஆகாச தீபம் வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.