
வழக்கமாக ஒரு மொபைலுக்கு என்னவெல்லாம் இலவசமாக தருவார்கள்? ஹெட்ஃபோன், டெம்பர் கிளாஸ். அதிகபட்சமாக போனால் மெமரி கார்ட், இதுதானே தருவார்கள்.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த செல்ஃபோன் கடை உரிமையாளர் ஸ்மார்ஃபோன்களுக்கு இலவசமாக ஒரு கிலோ வெங்காயத்தை தருகிறார்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வெங்காயம் இலவசமாக தர தொடங்கியவுடன், விற்பனை 5 மடங்கு உயர்ந்துவிட்டதாக அந்த கடையின் உரிமையாளர் கூறுகிறார்.
"வெங்காயம் இலவசம்"
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே இருக்கிறது எஸ்.டி.ஆர். மொபைல் கடை. இங்குதான் கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாகத் தரப்படுகிறது.கடையின் உரிமையாளர் சரவணக்குமார், "எங்களின் வேதனையை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறாக அறிவித்தோம்," என்கிறார்.

ஒரு நாளைக்கு வழக்கமாக அவர் கடையில் இரண்டு, மூன்று ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை ஆகுமாம். இந்த அறிவிப்புக்கு பிறகு விற்பனை 5 மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார்.

எகிறும் வெங்காய விலை
தமிழகம் முழுவதும் பரவலாக கிலோ ரூ 200-க்கு வெங்காயம் விற்கப்படுகிறது.
படத்தின் காப்புரிமை GETTY IMAGESவெங்காய விலை: வெங்காயமில்லாமலேயே கண்களில் தண்ணீர்!
Sources :BBC