பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், தற்போது ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே சரவணன், வனிதா, மீரா மிதுன் போன்றவர்கள் வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீடு சண்டையில் ஆட்டம் இல்லாமல் போனதால், இன்று வெளியான ப்ரோமோவில் நடிகை கஸ்தூரி போட்டியாளர்களை குறிவைத்து பேசி வருகிறார்.
சற்று முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில், சேரன் கஸ்தூரியை பார்த்து மீரா என்று ஒரு கேர்ள் இருந்தாங்க போயிட்டாங்க, வனிதானு ஒரு கேர்ள் இருந்தாங்க போயிட்டாங்க என கூற அதற்கு கஸ்தூரி மீராவா என பேச்சை இழுக்கிறார்.
அதன் பின் சேரன் எப்படி தெரியும் மீராவை என்று கேட்க அதற்கு கஸ்தூரி, அதுக்கு பின்னாடி கையை ரோபோ மாறி இங்கேயே வைத்துள்ளீர்கள் அப்படிதான் என்று சொல்கிறார்.
அதன் பின்னர், நான் எல்லா போட்டியாளர்களிடமும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு விடயத்துக்காக வந்திருப்பாங்க அதை நான் கேட்கணும் என்கிறார்.
முதலில் தர்ஷனிடம் நீங்க இங்க வர காரணம் என்ன கேட்கிறார். அதற்கு தர்ஷன் மக்கள் என்னை பார்க்கவேண்டும் என சொல்கிறார்.
ஷெரினிடம் கேட்டதற்கு, நான் தர்ஷனுக்காக வந்தேன் என்று கூறுகிறார். எப்படியும் இனி வரும் வாரங்களில் கஸ்தூரியால் ஆட்டம் சூடுபிடிக்கும் என்பது தெரிகிறது.