இலங்கைக்கு வருகை தந்தவுடன் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக விசாவை பெற்றுக்கொள்வதற்கான சலுகையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
Free visa-on-arrival நடைமுறை இதற்கு முன்னர் 35 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பின்னடைவை எதிர்நோக்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது இந்த சலுகையை 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகை நடைமுறை கடந்த மே மாதம் அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென துறைசார் அமைச்சு கூறியுள்ளது.