வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை பக்தர்கள் சென்று தரிசித்து வருகின்றனர்.
வவுனியா சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் வலது கண்ணில் இருந்தே இவ்வாறு இரத்தக்கண்ணீர் வடிந்து வருகின்றது.
இன்று காலை ஆலயத்தின் பூசகரான பெண் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது அம்மனின் சிலையில் இருந்து சிவப்பாக ஏதோ வடிவதை அவதானித்துள்ளார்.
உடனடியாக அதனை துடைத்த அவர் மீண்டும் அவ்வாறு கண்ணில் இருந்து வருவதை அவதானித்த நிலையில் ஆலயத்தின் தொண்டர்களை அழைத்து சம்பவத்தினை காட்டியுள்ளார்.
அவர்களும் அதனை துடைத்து பார்த்தபோது மீண்டும் கண்ணில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்த அவர்கள் விசேட பூஜைகளை நடத்திய நிலையில் தகவல் கிராமம் முழுவதும் பரவியது.
இதனையடுத்து நூறறுக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்த வண்ணமுள்ளதுடன் அம்மனின் வலது கண்ணில் இருந்து இரத்தம் சிந்துவது ஏன் என்ற அச்சம் கிராமத்தவர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளது.