இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா -1 விண்வெளியில் நேற்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த செய்மதி வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆர்தர் சி கிளாக் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் குறித்த செய்மதி 400 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொள்ளவுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இரண்டு தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இது, இலங்கையின் முதலாவது செய்மதியாக கருதப்படுகிறது.
குறித்த செய்மதி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வலம் வரவுள்ளது.
இந்தச் செய்மதியின் வேகம் வினாடிக்கு 7.6 கிலோமீற்றர்கள் என்பதுடன் இலங்கையையும், அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.