இந்து சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையே உள்ள கோகோஸ் தீவின் கடற்கரையில் ஒரு மில்லியன் பாதணிகள் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிக அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் அறிவியல் ஆய்வு அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் நீர் போத்தல்கள், பாதணிகள், தொப்பிகள், பற்தூரிகைகள் ஆகியனவும் கோகோஸ் தீவில் காணப்படுவதாக குறித்த ஆய்வை மேற்கொண்ட கடல் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு ஆய்வில் தென் பசுபிக் கடலில் ஃப்ளாண்டர்ஸ் தீவில் 38 மில்லியன் அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்பட்டதாக கூறப்பட்டதோடு அவற்றின் எடை 17 தொன் என்பது குறிப்பிடத்தக்கது.