நன்றி : http://www.bakthi.net
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ் மண் தன்னிகறற்ற சிவபூமியாகவும் திகழ்கிறது யாழ்ப்பாண ராச்சியத்தை வரவேற்கும் நுழைவாயிலில் நீரேரிகழும் பனைமரக்காடுகளும் தலையசைத்து வரவேற்கும் இடம் நாவற்குழி ,
யாழ் , நாவற்குழியில் ஏ - 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது . சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.
திருவாசக அரண்மனையின் மூலவராகத் சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் மிளிரக் காட்சி தருகின்றன. சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கர் தேர் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது . தேருக்கு மேலாகச் முழுமுதற் கடவுளான சிவபெருமான் . சிவலிங்க வடிவிலும் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது . தேரின் முன்பாக கருங்கல்லான பெரிய நந்தி அமைந்துள்ளது .
கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இருமருங்கிலும் மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658
திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளாமை வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும். கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு ' செதுக்கியுள்ளார்
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் , தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் , பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு . திருமுருகன்
திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ,சிங்களம், அரேபிய மொழி என 11 மொழிபெயர்ப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன . திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி . இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு . சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக பிரமாண்டமான திருவாசகம் அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ் மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய சான்றாகும் .
படங்கள் – ஐ.சிவசாந்தன்