ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பளம் கிடைக்கும் தொழில்களின் பட்டியலை ATO-வரித்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2016-17 காலப்பகுதியில் வரித்திணைக்களத்திற்கு வரி செலுத்திய 1,100 தொழில்துறை சார்ந்தவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி நாடு முழுவதும் அதிக வருமானமீட்டுபவர்களில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் முதலிடத்தில் காணப்படும் அதேநேரம் cafe பணியாளர்கள் ஆகக்குறைந்த வருமானமீட்டுபவர்களாக காணப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பளம் கிடைக்கும் தொழில்களில் முதல் பத்து இடங்களில் என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.