ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டது.
அந்தவகையில் இங்கு ராசிகளின் குணாதிசயங்களைப் பொறுத்து எந்த ராசிக்காரர்களுடன் யார் கூட்டணி வைக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.
மேஷம் - ரிஷபம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,தனுசு,மீனம் ராசியினர் நன்மை செய்வர், உதவுவர். அந்த ராசிக்காரர்களுடன் நட்பு, வியாபார கூட்டணி வைத்தால் தீமை உண்டாகாது.
கன்னி,விருச்சிகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,கன்னி,மகரம்,மீனம் ராசியினர் நன்மை செய்வர். துலாம், தனுசு ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மிதுனம் - கடகம்
மிதுனம், ராசியினருக்கு கன்னி,துலாம்,சிம்மம்,தனுசு,கும்பம்,மேஷம் ராசியினர் நன்மை செய்வர்.
விருச்சிகம்,மகரம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம் ராசியினருக்கு ரிஷபம்,துலாம்,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசியினரால் யோகம் உண்டாகும். தனுசு,கும்பம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
சிம்மம் - கன்னி
சிம்ம ராசியினருக்கு மிதுனம்,விருச்சிகம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினரால் நன்மை உண்டகும். மகரம்,மீனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கன்னி ராசியில் பிறந்தவருக்கு தனுசு,மகரம்,மீனம்,ரிஷபம்,கடகம் ராசியினர் நன்மை செய்வர். கும்பம்,மேஷம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
துலாம் - விருச்சிகம்
துலாம் ராசியினருக்கு மகரம்,கும்பம்,மேஷம்,மிதுனம்,சிம்மம் ராசியினர் நன்மை செய்வர். மீனம்,ரிஷபம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
விருச்சிகம் ராசியில் பிறந்தவருக்கு கும்பம்,மீனம்,ரிஷபம்,கடகம்,கன்னி ராசியினர் நன்மை செய்வர். மேஷம்,மிதுனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
தனுசு - மகரம்
தனுசு , ராசியில் பிறந்தவர்களுக்கு மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, ராசியினரால் நன்மை உண்டாகும். ரிஷபம்,கடகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மகரம், ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம்,கடகம்,ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள். மிதுனம்,சிம்மம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கும்பம் - மீனம்
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம் ராசியினர் நன்மை செய்வர். கடகம்,கன்னி ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம் ராசியினர் நன்மை செய்வர். சிம்மம்,துலாம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்
. இந்த பலன்கள் வியாபார கூட்டுக்கும்,நட்புக்கும் மட்டுமே பொருந்தும் உறவு முறைக்கு பொருந்தி பார்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.