அஜித், நயன்தாரா நடிப்பில் வந்த விஸ்வாசம் படம் 7ம் வாரத்தில் அடியெடுத்து வைத்துவிட்டது. பல இடங்களில் 50 ம் நாள் கொண்டாட்டமும் நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்த வாரங்களில் புதிய படங்கள் வெளியான போதும் இன்னும் விஸ்வாசம் ஓடிக்கொண்டிருப்பது படக்குழுவுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இப்படத்தில் உணர்ச்சி மிகுந்த வசனங்களுக்கும், பாரம்பரியமான விசயங்களும், அன்பான உறவுகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில் திருவிழா குறித்து அஜித் பேசும் வசனம் பலரையும் கவர்ந்த ஒன்று என சொல்லலாம்.
இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் தொடங்கவுள்ளதை முன்னிட்டு அவ்வசனத்தை வலியுறுத்தும் வகையில் மீம் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.