தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
படம் துவங்கி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆன நிலையில், சென்ற வருடம் தான் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியினை அறிவிக்காமலேயே இருந்தனர்.
இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.