தல அஜித் அடுத்து நடித்துவரும் பிங்க் ரீமேக் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
ஹிந்தியில் டாப்ஸி நடித்த ரோலில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார், அமிதாப் பச்சன் ரோலில் அஜித் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தல59ல் ஒரு கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. அப்படி நடந்தால் அதுதான் அவரின் முதல் தமிழ் படம்.
அஜித் படம் என்பதால் ஜான்விக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் மகளை நடிக்கவைக்கவுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.