அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தை காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஸ்வாசம் படத்தில் போக்குவரத்து விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். படத்தில் ஹீரோ ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவது, சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுவதாக துணை ஆணையர் சரவணன் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற விதிகளை அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
source : https://www.thanthitv.com/News/Cinema/2019/01/17160255/1021983/Ajith-Viswasam-Chennai-Police-Comissioner.vpf
source : https://www.thanthitv.com/News/Cinema/2019/01/17160255/1021983/Ajith-Viswasam-Chennai-Police-Comissioner.vpf