2019 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி?

மனித வாழ்க்கை ஒரு அற்புதமான வரம். இதை நாம் எத்தனை பேர் அர்த்த புஷ்டியாக வாழ்ந்து கொன்டு இருக்கிறோம் என்பதை எமக்குள் நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.
வரையறை கொண்டு நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். காலத்தின் வளர்ச்சி விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லா விடயங்களையும் சுலபமாக்கி மனிதனின் வியர்வை சிந்தி உழைக்கும் திறத்தைக்
குறைத்துக் கொண்டிருக்கின்றது.  எமது வாழ்வு இயற்கையோடு இணைத்து உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்து சுகதேகியாக வாழ வேண்டும் என திடசங்கற்பம்  பூணுவோம். இந்த 2019 ஆம் ஆண்டு இன்பங்கள் பொழிய இறைவன் நல்லருள் பொழியட்டும்.

மேடராசி (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம்)

மேன்மையான எண்ணங்களும், மேலாதிக்கமான செயற்பாடுகளும் கொண்ட மேட ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2019 ஆம் ஆண்டுப் பலாபலனில் முற்பகுதி சற்று மத்திமமானதாகவே அமையும் நிலை உண்டு. குருவின் அட்டமஸ்த்தான சஞ்சாரம். உடல் ரீதியான உபாதைகள் கொடுக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். சனீஸ்வரனின் பாக்கியஜ்தான சஞ்சாரம் இடையிடையே திடீர் நன்மைகள் கொடுக்கும். 114.02.2019 அன்று சாயாக்கிரகங்களான ராகு, கேது கிரகங்களின் பெயர்ச்சி முறையே, ராகு 3ம் இடமும், கேது 9ம் இடமும் அமைகின்றன. இந்தப் பெயர்ச்சியின் மூலமாக எதிர்பாராத நற்பலன்கள் திடீரென அமையும் நிலை இருக்கும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும். சேமிப்பு ஏற்படுத்தக் கூடிய நிலை சற்றுக் குறைவாக இருக்கும். 28.10.2019 அன்று அமையும் குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு மிகவும் சிறப்பாள பலாபலன் கொடுக்கும்.


குடும்பநிலை மகிழ்ச்சி, தொழில் நிலை முன்னேற்றம், திருமணம் போன்ற சுபகாரிய பலன்கள் அமைதல் கடன் பிரச்சினைகளில் சுமுகமான நிலைகள் ஏற்படும் எனவும், எல்லா வகையிலும் நன்மையான பலாபலன் அமையும் நிலையிருக்கும் எனலாம். எனவே 2019 ஆம் ஆண்டு பிற்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பான நல்ல யோக பலன்களைக் கொடுக்கும் நிலையிருக்கும். பெண்களுக்கு மனநிறைவான பலன்கள் அமையும். மாணவர்களுக்கு ஓரளவிற்கு வெற்றிகள் பெறும் நிலையிருக்கும். பொதுவாக முற்பகுதியில் மத்திம பலனும், பிற்பகுதியில் யோகமான பலாபலனும் 2019 இல் அமையும்.

ரிஷபராசி (கார்த்திகை 2,3,4 ஆம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம்)

இலகுவாக விடயங்களில் வெற்றி பெற வேண்டும் எனும் எண்ணமும், செயலும் கொண்ட இடபராசி அன்பர்களே!  2019ஆம் ஆண்டு உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூல பலன் தருவதாய் அமையும். தொழில் சார்ந்த சிறுசிறு சிக்கல் நிலைகள் இருக்கும். குருவின் கோசார பலன் களத்திரஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைகின்றது. ஒக்டோபர் வரை இப்பலன் தொடரும். அதன்
பின்னர் அட்டமத்து குரு சஞ்சாரம் அமையும். சனீஸ்வரன் ஏற்கனவே "அட்டமத்து சனி"
சாரமாய் அமைகின்றார். உங்கள் ராசிக்கு சனி யோகாதிபதியாக அமைந்தாலும் இடையிடையே
சிரமமான பலன்கள் கொடுப்பார். 14.02.2019 அன்று அமைகின்ற ராகு, கேது பெயர்ச்சி முறையே ராகு 2 ஆம் இடமும், கேது 8 ஆம் இடமும் அமைவதால் சற்று குடும்பநிலை சார்ந்த குழப்ப நிலைகளும் மனச் சஞ்சலமான நிலைகளும் உடல்நிலை சார்ந்த சிறுசிறு சுகயீனங்களும் அமையும் நிலையிருக்கும். பொதுவாக எந்தவிடயமாக இருப்பினும் திட்டமிட்டு செய்யமுடியாத நிலையிருக்கும். பணவரவு விடயங்களில் இழுபறி, தாமத நிலைகள் அமைகின்ற நிலையிருக்கும். பெண்களுக்கு சஞ்சலமான நிலை அதிகமாக இருக்கும், மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். பொதுவாக தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைகள் அமையும். நிதானமுடன் செயற்படுவது மிகவும் நல்லது. இந்த 2019 ஆம் ஆண்டு பெரும் நன்மை தரும் நிலை சற்றுக்குறைவே. ஆனாலும் முயற்சியினால் அனைத்தையும் சாதிக்கலாம்

மிதுனராசி (மிருகசீரிடம் 3, 4ஆம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம்)

மிகவும் மென்மையான பேச்சும், செயலும் கொண்டு செயற்படுகின்ற மிதுனராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2019ஆம் ஆண்டு சற்று மந்தமானதாக அமையும் நிலையிருக்கும். குடும்ப நிலையிலே சிறுசிறு பிரச்சினைச் சிக்கல் நிலைகள் தொடரும். 2019 ஒக்டோபர் மாதம் வரை குருவின் சஞ்சாரம் ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைவதும் 14.02.2019 முதலாக ராகு, கேது சஞ்சாரம் முறையே ராகு 1ஆம் இடமும் கேது 7ஆம் இடமும் அமைவது உங்களுக்கு மனச்சஞ்சலமான நிலைகள் சற்று அதிகமாக இருக்கும். தொழில் நிலையில் வேலைப்பளு அதிகம் அமையும். குடும்ப நிலையில் உறவினர்களுடன் மனஸ்தாபம் அமையும். எனவே எந்தவிடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். சனீஸ்வரனின் சஞ்சாரமும் 7ஆம் இடம் அமைவது மத்திமமான பலனே கொடுக்கும். புதிய முயற்சிகளில் இழுபறி தாமதநிலை இருக்கும். கடன் நிலைகளில் கடன் நிலைகளில் சற்று இழுபறிகள் அமையும். உடல் நிலை சார்ந்த உபாதைகள் ஏற்படும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலை அதிகமாகும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்சைகளில் சற்று மந்தமான நிலையிருக்கும், தொழில் சார்ந்த அலைச்சல் நிலை அதிகமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் எதிர் பார்க்கின்றவர்களுக்கு சற்று அனுகூலமான பலன் ஆண்டின் பிற்பகுதியிலே அமைகின்ற பலன் உண்டு. பொதுவாக இந்த 2019 ஆம் ஆண்டில் மிகவும் பொறுமையுடனும் நிதானமுடனும் செயற்படுவதே மிகவும் நல்லது.

கடகராசி (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)

காரியவாதிகளாக இருந்து தமது செயல்களில் எந்த வகையிலும் வெற்றி பெறுகின்ற ஆற்றலும், செயலும் கொண்ட கடகராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு ஆண்டின் முற்பகுதி மிகவும்
சிறப்பானதாக இருக்கும். குருவின் பஞ்சமஸ்தான சஞ்சாரமும் சனீஸ்வரனின் ரோகஸ்த்தான சஞ்சாரமும் உங்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலமான பலா பலன்கள் கொடுக்கும். 14.02 2019
முதலாக சாயாக் கிரகங்களை ராகு 12ஆம் இடமும், கேது ஆம் இடமும் அமைவது காரிய வெற்றிகள் அமையும். பொதுவாக புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகளும் தொழில் நிலை சார்ந்த உயர்வுகளும் அமையும். குடும்பநிலையில் மனமகிழ்வு இருக்கும். திருமணம் போற்ற சுபகாரியங்கள் அமையும் நிலையுண்டு. வெளிநாட்டு பிரயாணங்களுக்கும் நல்ல அனுகூலம் உண்டு. எனவே உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய நிலைகள் அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நன்மை உண்டு. மன நிலையில் மகிழ்வும் உறவினர்களுடன் அனுகூலமான நிலையும் இருக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் அமையும். 2019 ஒக்டோபர் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் ரோகஸ்தானமா கிய 6ஆம் இடம் அமைவது சற்று மத்திமமான சுமாரான பலன்களே அமையும் நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் சிறு சிறு தடைகள் தாமத நிலைகள் அமையும். உடல் நிலை சார்ந்த சுகயீனங்கள் ஏற்பட்டு மறையும். பெரும்பாலும் அனுகூலமான பலன்கள் கொடுக்கும். எனவே அதற்கு ஏற்ப செயற்பட்டு வெற்றி காண்க.

சிம்மராசி (மகம், பூரம், சக்கரம் 1ஆம் பாதம்)

சிறப்புமிக்க ஆளுமைத்திறன் கொண்ட சிம்மராசி அன்பர்களே உங்களின் ராசிக்கு 2019 ஆம் ஆண்டிலே முற்பகுதி சற்று மத்திமமானதாகவே அமைகின்ற நிலையிருக்கும். குருவின் சஞ்சாரம் சுகஸ்த்தானமாகிய 4ஆம் இடம் அமைவதும், சனீஸ்வரனின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5 ஆம் இடம் அமைவதும் சற்று மனச்சஞ்சலமான நிலைகளைக் கொடுக்கின்ற பலனுண்டு தொழில் சார்ந்த அலைச்சல், வேலைப்பளு என்பன தொடரும் நிலையிருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையிருக்கும், 14.02.2019 முதலாக ராகு 11ஆம் இடம் கேது 5ஆம் இடம் என உங்களின் ராசி நிலைக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் கொடுக்கின்ற நிலையிருக்கும். கேதுவின் 5ஆம் இடம் புத்திரர்களின் மூலமாக மனச்சஞ்சலங்களைக் கொடுக்கும். 2019 ஒக்டோபர் மாதத்தின் மேல் அமைகின்ற குருவின் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் கொடுக்கும் நிலையுண்டு தொழில் நிலைய முன்னேற்றம், குடும்பநிலை மகிழ்வுகள், பணவரவு என்பன சிறப்பாக அமையும் நிலையிருக்கும் பெண்களுக்கு மனமகிழ்வும் குடும்பநிலை சிறப்பும் இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் அமையும் நிலையிருக்கும். எனவே ஆண்டின் பிற்பகுதி எல்லா வகையிலுமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும் முற்பகுதியில் சற்று பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும்.

கன்னிராசி (உத்தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்திரம் 1,2ஆம் பாதம்)

கச்சிதமான காரியங்களில் கவனமும் செயலும் கொண்டு செயற்படும் கன்னி ராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு 2019 ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமையும் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகளில் காரியத்தடைகள், இழுபறி நிலைகள் என்பன இருக்கும். குருவின் சஞ்சாரம் ஜெயஸ்த்தானமாகிய 3ஆம் இடமும் சனீஸ்வரனின் சஞ்சாரம் சுகஸ்த்தானமாகிய 4ஆம் இடமும் அமைகின்றது. 14.02.2019 அன்று ராகு 10ஆம் இடமும் கேது 4ஆம் இடமும் உங்கள் ராசி நிலைக்கு அமைகின்றது. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு எந்த விடயம் எடுத்தாலும் சற்று இழுபறியான மத்திமமான பலனே அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். குடும்ப நிலையில் சிறுசிறு சஞ்சலமான பலன்கள் இருக்கும். உடல்நிலையில் உபாதைகள் அமையும். எதிர்பாராத திடீர் செலவீனங்கள் ஏற்படும். குடும்ப உறவினர்களுடன் மனச்சஞ்சல நிலைகள் ஏற்படும். எனவே பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும் 2019 ஒக்டோபர் மாதத்தின் மேல் உங்கள் ராசிக்கு அமையும் குருவின் பலன் சுகஸ்த்தானமாகிய 4ம் இடம் அமைவது சற்று அலைச்சல் நிலைகளைக் கொடுக்கும். பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகள் அதிகம் இருக்கும். பொதுவாகவே 2019 ஆம் ஆண்டிலே சற்று மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு.

துலாராசி (சித்திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3,4 ஆம் பாதம்)

துல்லியமான செயற்பாடும் தூய்மையான குண இயல்பும் கொண்ட துலா ராசி அன்பர்களே! இந்த 2019 ஆம் ஆண்டு ஓரளவிற்கு அனுகூலமான நல்ல வெற்றிகள் அமையும் நிலையுண்டு. பொதுவாக உங்களின் செயல்பாடுகளில் நல்ல வெற்றிகளை பெறமுடியும். உங்கள் ராசிக்கு 2019 ஒக்டோபர் மாதம் வரை குருவின் சஞ்சாரம் சிறப்பான தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவதும் 14.02.2019 முதலாக சாயாக் கிரகங்களான ராகு, பாக்கியஸ்தானமாகிய 9ஆம் இடமும் கேது ஜெயஸ்தானமாகிய 3ஆம் இடமும், அமைவது தொழில் நிலைச் சிறப்பு, குடும்பநிலை மகிழ்வுகள் என்பன சிறப்பாக அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும் பலன் இருக்கும். மற்றும் வெளிநாட்டு பிரயாண பலாபலன்களும்
மிகவும் அனுகூலமானதாக அமையும் பலன் இருக்கும். சனீஸ்வரனின் சஞ்சாரம் வருடம் முழுவதும் ஜெயஸ்தானமாகிய 3இல் அமைவதும் சிறப்பான பலனே கொடுக்கும் கொடுக்கல் வாங்கலில் அனுகூலமான நன்மைகள் அமையும். ஆண்டின் பிற்பகுதியில் குருவின் சஞ்சாரம் ஜெயஸ்தானமாகிய 3ஆம் இடம் அமைவது எடுக்கின்ற முயற்சிகளில் சிறுசிறு காரியத்தடைகள் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளுவும் அமைந்திருக்கும். உறவினர்களுடன் சிறுசிறு சஞ்சல நிலைகள் ஏற்படும். கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும். பொதுவாக இந்த 2019ஆம் ஆண்டு பெரும்பாலும் அனுகூலமான நன்மைகள் அமையும் நிலையுண்டு.

விருச்சிக ராசி (விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

விபரமான சிந்தனையும், செயற்பாடும் அதிகமாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலை 2019 ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமையும் நிலையுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தொழில் சார்ந்த வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கும். உங்களின் ராசி நிலைக்கு குருவின் சஞ்சாரம் ஜென்மஸ்தானமாகிய 1ஆம் இடம் அமைவதும், 14.02.2019 முதலாக சாயாக்கிரகங்களான ராகு 8 ஆம் இடமும், கேது 2 ஆம் இடமும் அமைவதும் எதிர்பாராத திடீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிருக்கும். வருடம் முழுவதும் ஏழரைச்சனி சஞ்சாரம் அமைவதால் உடல்நிலை சார்ந்த உபாதைகள் குடும்பநிலையில் சிறுசிறு சஞ்சலங்கள் தேவையற்ற வீண் பிரச்சினைகள் என்பன அமையும். பலாபலன்கள் இருக்கும். தொழில் நிலையில் வேலைப்பளு, அலைச்சல் நிலை, மேலதிகாரிகளுடன் பிரச்சினை போன்ற பலாபலன்கள் அமையும் நிலையிருக்கும். பெண்களுக்கு சற்று மனச்சஞ்சலமான நிலைகள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் சற்றுக் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். எந்தவிடயமாயினும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையிருக்கும், ஒக்டோபர் மாதம் முதலாக குருவின் பலன் தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவதனால் சிறுசிறு நன்மைகள் அமையும் நிலை இருக்கும். இருப்பினும் அதிகமான நன்மை
களை 2019ஆம் ஆண்டு நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எனவேஅதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். மனநிலையில் சஞ்சலமான பலன் இருக்கும். எனவே பொறுமை நிதானத்துடன் செயற்பட வேண்டும்.

தனுசுராசி (மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம்)

தன்னம்பிக்கையோடும் தளர்வில்லா மனத்தோடும் போராடி ஜெயிக்கும் குணமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு 2019 ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமைகின்ற நிலையிருக்கும். குருவின்  கோசார சஞ்சாரம் உங்கள் ராசி நிலைக்கு விரயஸ்த்தானமாகிய 12 ஆம் இடத்திலே அமைவது அனுகூலமானதாக இருப்பினும் உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடுச்சுற்று சஞ்சாரம் நடைபெறுவதும், 14.02.2019 முதலாக ராகு, களத்திரன் தானமாகிய 7 ஆம் இடமும் கேது ஜென்ம ஸ்தானமாகிய 1ஆம் இடமும் அமைவதனால் சற்று சஞ்சலமான பலா பலன்கள் அதிகமாக இருக்கும். தொழில் நிலை சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும். உடல் நிலையில் சுகயீனம், மருத்துவ செலவு என்பன ஏற்படும். எந்த விடயம் என்றாலும் சற்று பொறுமை, நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். குடும்ப நிலையில் தேவையற்ற சிறுசிறு பிரச்சினைகள், குழப்ப நிலைகள் என்பன ஏற்படும். பெண்களுக்கு மனச் சஞ்சலமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வி நிலை சார்ந்த விடயங்களில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும் எனவே இந்த ஆண்டில் காரியத் தடைகளும் அலைச்சல் நிலைகளும் சற்று அதிகமாக இருக்கும். அத்தோடு ஒக்டோபர் மாதம் முதலாக குருவின் சஞ்சாரமானது ஜென்மஸ்தானம் அமைவது சிக்கலான நிலைகளைக் கொடுக்கும். எனவே பெண்களுக்கு சஞ்சலமான நிலை அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே இந்த 2019 ஆம் ஆண்டு மத்திமமாகவே அமையும்.

மகரராசி (உத்தராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்)

மன தைரியமான செயற்பாடும் வெளிப்படையாக பேசும் குண இயல்பும் கொண்ட மகரராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு 2019ஆம் ஆண்டு சற்று மத்திமமானதாகவே அமையும், தொழில் சார்ந்த வேலைப்பளு, தொழில் இடமாற்றம், தேவையற்ற அலைச்சல் போன்ற பலாபலன் அமையும் நிலையிருக்கும். குருவின் கோசார பலாபலன் ராசி. நிலைக்கு லாபஸ்த்தானமாகிய 11 ஆம் இடம் அமைவதும் ஏழரைச்சனி சஞ்சாரம் அமைவதும் எதிர்பாராத சிறுசிறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டு மறையும் நிலை இருக்கும். அதேநேரம் 14.02.2019 அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சியில் ராகு ரோகஸ்த்தானமாகிய 6ஆம் இடமும் கேது விரயஸ்த்தானமாகிய 12 ஆம் இடமும் அமைவது சிறுசிறு நன்மைகள் கொடுக்கும் நிலையிருக்கும். குடும்ப நிலையிலே எதிர் பாராத செலவீனங்கள் இருக்கும். உங்களின் முயற்சிகளில் சற்று மந்தமான நிலையிருக்கும். எதையும் திட்டமிட்டு செய்யமுடியாத நிலையிருக்கும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் இழுபறி இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் எதிர்பார்க்கின்றவர்களுக்கு ஆண்டின் பிற்பகுதியில் அனுகூலமான பலன்கள் அமையும் பலன் உண்டு. ஒக்டோபர் மாத முற்பகுதியில் அமையும் குருப்பெயர்ச்சி திடீர் நன்மைகள் நற்பலன்கள் கொடுக்கும் பலன் அமையும். பொதுவாக எந்தவிடயம் என்றாலும் சற்று போராடியே ஜெயிக்க வேண்டிய நிலையுண்டு. எனவே அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது மிகவும் நல்லது. எனவே 2019ஆம் ஆண்டு உங்களுக்கு மத்திம பலன் தரும்.

கும்பம்

பிறரின் நிறைகளை மட்டும் பார்ப்பவர்களே!
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும்போது வருடம் பிறப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.

12.2.19 வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். ஆனால், ராகு 6-ல் இருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.2.19 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ல் இருப்பதால், அலைச்சல், செலவுகள் ஏற்படும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும்.பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வருடம் முழுவதும் சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். பிற மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கவும், புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணி நிரந்தரமாகும்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு ராசிக்கு 10-ல் இருப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் உடல் அசதி உண்டாகும். மறைமுக அவமானம் ஏற்பட்டு நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்று ஓர் அச்சம் மனதை வாட்டும். வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.


வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள்.

மீனம்

மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே!

சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க ஆபரணம், விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருக்கும் வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் உதவி கிடைக்கும். ஆனால், சந்திரன் 8-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வறட்டு கௌரவத்துக்காக செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

செவ்வாய் ராசியில் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சில் கம்பீரம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.


12.2.19 வரை லாப வீட்டில் கேது இருப்பதால், எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலிமை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழி ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும்.

வருடம் முழுவதும் சனி 10-ல் இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனாலும், உத்தியோகத்தில் சில பிரச்னைகள், வீண்பழிகள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். புதுப் பதவிகளுக்கும், கௌரவப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். செலவைக் குறைத்து சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

வருடத் தொடக்கத்திலிருந்து 12.3.19 வரை மற்றும் 10.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கி, அதிக வட்டிக் கடனைத் தந்து முடிப்பீர்கள். நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த வெளி மாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்திலும், 28.10.19 முதல் வருடம் முடியும் வரை கோசாரத்திலும் குரு 10-ல் அமர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்குமோ என்பது போன்ற அச்ச உணர்வு ஏற்படும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.

வியாபாரிகளே! லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். அனுபவம் மிக்க வேலையாள்கள் பணியில் சேருவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், தோல்பொருள் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணிகளை முடிப்பதில் சுணக்கம் காட்டவேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள். நினைவாற்றலை அதிகரித்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினரே! உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.





Name

Ayurvedic,1,Banner,8,cinema,70,Panchangam,9,spiritual,77,sports,19,Technology,12,Tourism,5,இன்றைய ராசிபலன்,64,கவிதைகள்,32,குருப்பெயர்ச்சி,5,திருக்கதைகள்,10,நிகழ்வுகள்,250,வேலைவாய்ப்புக்கள்,11,
ltr
item
Free Tech Daily: 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி?
2019 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி?
மனித வாழ்க்கை ஒரு அற்புதமான வரம். இதை நாம் எத்தனை பேர் அர்த்த புஷ்டியாக வாழ்ந்து கொன்டு இருக்கிறோம் என்பதை எமக்குள் நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். வரையறை கொண்டு நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். காலத்தின் வளர்ச்சி விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லா விடயங்களையும் சுலபமாக்கி மனிதனின் வியர்வை சிந்தி உழைக்கும் திறத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது. எமது வாழ்வு இயற்கையோடு இணைத்து உடலுக்கு ஆரோக்கியம் கொடுத்து சுகதேகியாக வாழ வேண்டும் என திடசங்கற்பம் பூணுவோம். இந்த 2019 ஆம் ஆண்டு இன்பங்கள் பொழிய இறைவன் நல்லருள் பொழியட்டும். rasipalan panchangam 2019 2019 RASI PALAN 2019 IN TAMIL 2019 rasi palan 2019-2020 rasi palan ராசி பலன் 2019 – Rasi Palan 2019 Tamil Rasi palan: 2019 Rasi palan in Tamil
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPxps1Fomdp5ojtPshrVcyi9LIzJDJ2nxPcLIVLuCAdhQ5WQgSo3yrJie1Mliq70uoGbC_G2lzAjWFd3iwD71f_qjOF-OgZgo_7Hepuxi3HjUR_yAaTEwgkvZ6os6gNs0vUJlv-6zOTGRP/s640/2019-horoscopes-Tamilvalai.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPxps1Fomdp5ojtPshrVcyi9LIzJDJ2nxPcLIVLuCAdhQ5WQgSo3yrJie1Mliq70uoGbC_G2lzAjWFd3iwD71f_qjOF-OgZgo_7Hepuxi3HjUR_yAaTEwgkvZ6os6gNs0vUJlv-6zOTGRP/s72-c/2019-horoscopes-Tamilvalai.png
Free Tech Daily
https://freetechdaily.blogspot.com/2019/01/2019.html
https://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/2019/01/2019.html
true
3500669192308647346
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy