"சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை..!" : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.
சுக்கில பட்ச தசமி திதி பின்னிரவு 4.51 வரை. பின்னர் ஏகாதசி திதி. உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை. சித்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்தம், உத்திரம். சுபநேரங்கள் பகல் 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.00–12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்). வாயிலார் நாயனார் குருபூசை. கிழக்கில் குரு உதயம்.
மேடம் : நன்மை, யோகம்
இடபம் : அமைதி, தெளிவு
மிதுனம் : செலவு, விரயம்
கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
சிம்மம் : கவலை, கஷ்டம்
கன்னி : வரவு, இலாபம்
துலாம் : தடை, தாமதம்
விருச்சிகம் : முயற்சி, முன்னேற்றம்
தனுசு : அன்பு, ஆதரவு
மகரம் : பக்தி, ஆசி
கும்பம் : தெளிவு, அமைதி
மீனம் : அன்பு, பாசம்
அதிகாலை சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பாவை ஓதுதல். நாளை செவ்வாய் அதிகாலை 5 மணிக்கு தெகிவளை நெடுமால் ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சி பூஜை. ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதம் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி அடியார்க்கு திருவீதியுலா இடம்பெற்று அடியார்கள் வைகுந்தம் புகுதல் வைபவம் வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே.
சனி, ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
பொருந்தா எண்கள்: 8, 4
அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)