மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் மதம் மற்றும் மொழி நல்லிணக்கம் உருவானது குறித்து சதயவிழாவில் சுவாரஸ்யமான தகவல் வெளியானது.
தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033-ம் ஆண்டு சதய விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. நேற்று (19/10/2018) தொடங்கிய இவ்விழா, இரண்டாம் நாளாக இன்றும் (20/10/2018) தொடர்கிறது. இவ்விழாவில் உரையாற்றும் சிறப்பு விருந்தினர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் மாமன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தின் சிறப்புகள் குறித்து பேசி வருகிறார்கள். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தனது உரையின்போது, ``மாபெரும் கடற்படையை ராஜராஜன் வைத்திருந்தார். நிலத்தை அளவீடு செய்யும் முறையும் அவரது ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது. அப்போது அனைத்து கலைகளும் செழித்து வளர்ந்துள்ளன. பண்முகத்தன்மை கொண்டவர் ராஜராஜன். அதனால்தான் 1,000 ஆண்டுகள் கடந்தும் அவருக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
[post_ads]
கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டுத்துறை தலைவர் ராஜவேல் உள்ளிட்டவர்களும் உரையாற்றினார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன், ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் மதம் மற்றும் மொழி நல்லிக்கணக்கம் எப்படி உருவானது என விவரித்தார். இதுகுறித்து உரையாற்றிய அவர், ``தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நான் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது. சில சென்டிமென்ட் காரணங்களைச் சொல்லி என் நண்பர்கள் சிலர், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் என எச்சரித்தார்கள். ஆனால், நான் இதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
[post_ads]
ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் பல்வேறு மதங்களுக்கிடையே நல்லிணக்கம் இருந்திருக்கிறது. அதற்குப் பிந்தைய காலகட்டங்களில்தான் மத பூசல்கள் உருவாகின. கடல் தாண்டி பல நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்ற ராஜராஜன், வெற்றிபெற்றதும், அந்தந்த பகுதிகளில் தன் பிரதிநிதிகளை நியமித்தார். இதனால் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு மொழிகள் இங்கு அறிமுகமாயின. பிறமொழி பேசும் மக்களையும் ராஜராஜன் மதிப்புடன் நடத்தியிருக்கிறார். தமிழுக்கும் மற்ற மொழிகளுக்குமிடையே நல்லிணக்கம் நீடித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
Thanks vikatan.com