"வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்
21.09.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கில பட்ச துவாதசி திதி பின்னிரவு 4.35 வரை. பின்னர் திரயோதசி திதி. திருவோணம் நட்சத்திரம் மாலை 6.35 வரை. பின்னர் அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. மரணயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், பூசம். மேல்நோக்கு நாள் சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகைகாலம் 7.30– 9.00, வாரசூலம் –மேற்கு (பரிகாரம்– வெல்லம்) சிரவண விரதம் நாளை புரட்டாதி சனிவாரம். சனி பகவான் மகா விஷ்ணு சிறப்பு வழிபாடு.
மேடம் : அமைதி, சாந்தம்
இடபம் : போட்டி, ஜெயம்
மிதுனம் : திறமை, முன்னேற்றம்
கடகம் : கவலை, சங்கடம்
சிம்மம் : தடை, இடையூறு
கன்னி : சலனம், சஞ்சலம்
துலாம் : பகை, விரோதம்
விருச்சிகம் : நிறைவு, பூர்த்தி
தனுசு : பணம், பரிசு
மகரம் : லாபம், லக் ஷ்மீகரம்
கும்பம் : தெளிவு, அமைதி,
மீனம் : காரியசித்தி, அனுகூலம்
இன்று வாமன ஜெயந்தி “விஷ்ணு சகஸ்ர நாமம்” ஆனந்த –பேரானந்தமுள்ள வன். நந்தன –முக்தியில் பேரானந்தத்தை அளிப்பவன். ஸத்யதர்மா– முதலிலிருந்து முடிவுவரை தன்னை அடையும்வரை நேர்மையுடையவன். திரிவிக்கிரமன்– மூன்று தேவர்களிலும் பரவியவன். குரு, புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)