அடக்கமாயிருப்பேன் சில நேரம்...
ஆர்ப்பரிப்பேன் பல நேரம்...
சிரித்துக் கொண்டேயிருப்பேன் ஒருநேரம்...
அழுது கொண்டேயிருப்பேன் மறுநேரம்...
உம் மென்று இருப்பேன் சிலவேளை..
உளறிக் கொட்டுவேன் பலவேளை...
கட்டியணைப்பேன் ஒருவேளை ...
காட்டுமிராண்டியாய் கத்துவேன் மறுவேளை...
நான்கு சுவரிற்குள் அடைந்திடுவேன்...
நான் வாழ அதிலோர் சிறையமைப்பேன்...
இரும்புச் சங்கிலியால் எனை கட்டிடுவேன்...
இயன்றளவு மாத்திரையை விழுங்கிடுவேன்...
நடுச்சாமத்தில் அலைந்திடுவேன்...
அதிகாலை வரை விழித்திருப்பேன்...
நாள் பொழுதில் தூங்கிடுவேன்...
நலம் பேணுவதாய் நடித்திடுவேன்...
என்னை அருவருப்பாய் நினைக்கும்
உறவுகள் அதிகம்...
என் உணர்வை அவமானப்படுத்தும்
உள்ளங்கள் அதிகம்...
என்னை ஒதுக்க முனையும்
சம்பவங்கள் அதிகம்...
என்னை கண்டு ஒதுங்கும்
நிகழ்வுகள் அதிகம்...
வார்த்தையால் வறுத்தெடுக்க பலருண்டு...
அன்பால் அரவணைக்க எவருமில்லை
கடமைக்காக பழக சிலருண்டு...
கண்ணீரை துடைக்க யாருமில்லை...
நேரத்தைப் போக்க ஆட்களுண்டு...
பாரத்தை சுமக்க அவர்களில்லை...
தேவையை தீர்க்க சனங்களுண்டு...
தேடிப் போக நல்ல மனங்களில்லை...
பணத்தை நாடி ஓடும்
மானிடர் மத்தியில்
உண்மை மனதை
தேடும் நான் பைத்தியக்காரி...
நான் உதிர்க்கும்
வார்த்தைகளெல்லாம் உளறல்கள்...
என் எழுத்துக்கள்
அத்தனையும் வெறும் கிறுக்கல்கள்...
✍🏻தோழி கவிதாயினி
ஆர்ப்பரிப்பேன் பல நேரம்...
சிரித்துக் கொண்டேயிருப்பேன் ஒருநேரம்...
அழுது கொண்டேயிருப்பேன் மறுநேரம்...
உம் மென்று இருப்பேன் சிலவேளை..
உளறிக் கொட்டுவேன் பலவேளை...
கட்டியணைப்பேன் ஒருவேளை ...
காட்டுமிராண்டியாய் கத்துவேன் மறுவேளை...
நான்கு சுவரிற்குள் அடைந்திடுவேன்...
நான் வாழ அதிலோர் சிறையமைப்பேன்...
இரும்புச் சங்கிலியால் எனை கட்டிடுவேன்...
இயன்றளவு மாத்திரையை விழுங்கிடுவேன்...
நடுச்சாமத்தில் அலைந்திடுவேன்...
அதிகாலை வரை விழித்திருப்பேன்...
நாள் பொழுதில் தூங்கிடுவேன்...
நலம் பேணுவதாய் நடித்திடுவேன்...
என்னை அருவருப்பாய் நினைக்கும்
உறவுகள் அதிகம்...
என் உணர்வை அவமானப்படுத்தும்
உள்ளங்கள் அதிகம்...
என்னை ஒதுக்க முனையும்
சம்பவங்கள் அதிகம்...
என்னை கண்டு ஒதுங்கும்
நிகழ்வுகள் அதிகம்...
வார்த்தையால் வறுத்தெடுக்க பலருண்டு...
அன்பால் அரவணைக்க எவருமில்லை
கடமைக்காக பழக சிலருண்டு...
கண்ணீரை துடைக்க யாருமில்லை...
நேரத்தைப் போக்க ஆட்களுண்டு...
பாரத்தை சுமக்க அவர்களில்லை...
தேவையை தீர்க்க சனங்களுண்டு...
தேடிப் போக நல்ல மனங்களில்லை...
பணத்தை நாடி ஓடும்
மானிடர் மத்தியில்
உண்மை மனதை
தேடும் நான் பைத்தியக்காரி...
நான் உதிர்க்கும்
வார்த்தைகளெல்லாம் உளறல்கள்...
என் எழுத்துக்கள்
அத்தனையும் வெறும் கிறுக்கல்கள்...
✍🏻தோழி கவிதாயினி