பொதுவாக சிலருக்கு 30 வயதை தாண்டியும் திருமணம் நடைபெறமால் இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் உள்ளன.
இதற்கு முக்கிய காரணம் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால் அது கடுமையான திருமண தோஷமாக கருதப்படுகின்றது.
இதில் இருந்து விடுபட சில ஆன்மீக குறிப்புகள் சொல்லப்படுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம்.
- பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மொழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.
- தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.
- விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.
- இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும்.
- அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து மங்களமாக முடியும்.