11 திருமுகங்களுடன் அருள்பாலிக்கும் முருகன்.

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் (India).

மூலவர்    - சுவாமிநாத சுவாமி
ஊர்         - குண்டுக்கரை
மாவட்டம் - ராமநாதபுரம்
மாநிலம்   - தமிழ்நாடு (இந்தியா)


திருவிழா
சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலன்று சாகம்பரி என்ற காய்கறி பழ அலங்காரத்தில் அம்பிகை காட்சி தருவாள். வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம், சூரசம்ஹார விழா 7 நாள், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன விழாக்கள் ஆகும். திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்குதான் சூர சம்ஹார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு
இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்பாலிக்கிறார்.
கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.


திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை 
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை

முகவரி
இருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்இ குண்டுக்கரை-623 501 ராமநாதபுரம் மாவட்டம்.
தொலைபேசி எண் +919786266098

பிரார்த்தனை
இத் தலத்தில் வந்து வழிபடுபவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

நேர்த்திக்கடன்
முருகனுக்கு அபிசேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலப்பெருமை
சூரபத்மனை வதம் செய்வதற்க்கு முன்பே முருகன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கின்றது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகின்றார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மேல் அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவபெருமான் அதை நின்று கேட்பது போல் அமைந்துள்ளது.
முருகனே சிவன் சிவனே முருகன் இருவரில் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்திருப்பது மிகச்சிறப்பன அம்சமாகும்.

தல வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒரு முறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தபொழுது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி "குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலைக்குப்பதில் புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்" என கூறி மறைந்தார்.  அதன் படியே அவரும் செய்தார். சுவாமிமலையானின் பெயரான 'சுவாமிநாதன்' என்று
பெயர் சூட்டினார். நன்றி dinamalar.com

இலங்கையில் 11 திருமுகங்களுடன் அருள்பாலிக்கும் முருகன் (மாதம்பே முருகன் ஆலயம்).



புத்தள மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரப்பகுதி மாதம்பே (Madampe). இங்கு அமைந்துள்ள முருகன் ஆலயம் பிரசித்தி வாய்ந்தது. இது சிலாபத்தில் (Chilaw) இருந்து 9Km தெற்காகவும் மாறவில் (Marawila) இல் இருந்து 10Km வடக்காகவும் பிரதான வீதியில் அமைந்துள்ளது. இது மிகவும் வர்ணமயமான அழகான நவீனத்துவமான (Modern Drawidian) ஆலயம்.

இவ் ஆலயத்தை கதிர்காமத்தின் பிரதி (சின்னக்கதிர்காமம்) எனவும் அழைப்பர். இவ் ஆலயத்தின் மிகப்பெரிய கட்டடம் 2012ம் ஆண்டு தை மாதம் திறந்துவைக்கப்பட்டது.



Address 
Madampe Murukan Kovil,
Puttalam District,
North Western Province
SRI LANKA.
Coordinate  7.509908, 79.829600
Name

Ayurvedic,1,Banner,8,cinema,70,Panchangam,9,spiritual,77,sports,19,Technology,12,Tourism,5,இன்றைய ராசிபலன்,64,கவிதைகள்,32,குருப்பெயர்ச்சி,5,திருக்கதைகள்,10,நிகழ்வுகள்,250,வேலைவாய்ப்புக்கள்,11,
ltr
item
Free Tech Daily: 11 திருமுகங்களுடன் அருள்பாலிக்கும் முருகன்.
11 திருமுகங்களுடன் அருள்பாலிக்கும் முருகன்.
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் - 11 திருமுகங்களுடன் அருள்பாலிக்கும் முருகன். இலங்கையில் 11 திருமுகங்களுடன் அருள்பாலிக்கும் முருகன், மாதம்பை முருகன் ஆலயம், Madampe Madampe Murukan Kovil Puttalam Murugan Chilaw Murugan kovil 11 heads, 11 heads murugan, 11 heads murugan in srilanka, srilanka murugan, loadr murugan, madambe murugan temple, temple, swaminatha swami temple
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnD05YhqCA6JQ5hEamKzlqF7wwIXWg8_hdBv3SXq2xyYeKq7ZALlaQ6BJT5BqrtaZylD8MvUSwFmRRea3P7pnJw5UwU_tvAbZRyYHRL4wNfmGhFuy6Aq6u_At4MDBitg0B8BTO6sUbiBoS/s640/Madampe+Murukan+Kovil_tamilvalai.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnD05YhqCA6JQ5hEamKzlqF7wwIXWg8_hdBv3SXq2xyYeKq7ZALlaQ6BJT5BqrtaZylD8MvUSwFmRRea3P7pnJw5UwU_tvAbZRyYHRL4wNfmGhFuy6Aq6u_At4MDBitg0B8BTO6sUbiBoS/s72-c/Madampe+Murukan+Kovil_tamilvalai.png
Free Tech Daily
http://freetechdaily.blogspot.com/2018/09/11.html
http://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/
http://freetechdaily.blogspot.com/2018/09/11.html
true
3500669192308647346
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy