நான் உன்னை
நிஜமாக காதலித்தேன்
நீ என்னனை
நிஜமாகவே கைவிட்டுவிட்டாய்
இன்று
என்னை விட
அவள் அழகாக தெரிகிறாள்
உன் விழிகளுக்கு
நாளை
உன்னைவிட
இன்னொருவன்
அழகாக தெரிவான்
அவள் விழிகளுக்கு
அப்போது புரியும் உனக்கு
அழகான இந்த பூமியில்
எப்போதும்
ஒன்றைவிட இன்னொன்று
அழகாக இருக்கும் என்று...